Tamil Nadu Logo

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் விண்ணப்ப நிலை அறிவது எப்படி?

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் (KMUT) விண்ணப்ப நிலையை ஆன்லைனில் சரிபார்க்க, இந்தப் படிகளைப் பின்பற்றவும்:

1. KMUT இணையதளத்திற்குச் செல்லவும்.
2. “உங்கள் விண்ணப்பத்தின் நிலையை அறிய” பட்டன்-ஐ கிளிக் செய்யவும்.
3. “பொதுமக்கள் உள்நுழைவு” பட்டன்-ஐ கிளிக் செய்யவும்
4. உங்கள் ஆதார் எண்ணை உள்ளிடவும்
5. “OTP அனுப்பவும்” பட்டன்-ஐ கிளிக் செய்யவும்
6. ஆன்லைனில் உங்கள் விண்ணப்ப நிலையை அறிய OTP ஐச் சரிபார்க்கவும்.

Check Kalaingar Magalir Urimai Thogai [KMUT] Application Status Here

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் நோக்கம்

‘கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்’ இரண்டு முக்கிய நோக்கங்களைக் கொண்டது. குடும்பத்திற்காக வாழ்நாளெல்லாம் ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கும் பெண்களின் உழைப்புக்குக் கொடுக்கும் அங்கீகாரம் முதன்மையானது.

அடுத்து, ஆண்டுக்கு 12 ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை என்பது, பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூகத்தில் சுயமரியாதையோடு வாழ்வதற்கு வழிவகுக்க வேண்டும் என்பதாகும்.

பெண்களின் உழைப்புக்கான பொருளாதார மதிப்பு

சமூகத்தில் வெற்றி பெறக்கூடிய ஒவ்வொரு ஆணுக்குப் பின்னாலும் ஒரு பெண் இருப்பார் என்று கூறுவதுண்டு. உண்மையில், ஒவ்வொரு நாளும் தன் திறனுக்கேற்ற பணிபுரிந்து, பொருள் ஈட்டும் ஒவ்வொரு ஆணுக்குப் பின்னாலும், அவரது தாய், சகோதரி, மனைவி, மகள் ஆகிய பெண்களின் பல மணிநேர உழைப்பு மறைந்து இருக்கிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது.

ஒவ்வொரு ஆணின் வெற்றிக்காகவும், அவரவர் குழந்தைகளின் கல்வி, உடல் நலம் காக்கவும் இந்தச் சமூகத்திற்காகவும், வீட்டிலும், வெளியிலும் ஒரு நாளைக்குப் பல மணி நேரம் பெண்கள் உழைத்துக் கொண்டு இருக்கிறார்கள். இந்த உழைப்புக்கு ஊதியம் கணக்கிடப்பட்டிருந்தால், குடும்பச் சொத்துகள் அனைத்திலும் சமமாகப் பெண்கள் பெயரும், சட்டம் இயற்றாமலேயே இடம் பெற்றிருக்கும்.

இப்படி கணக்கில் கொள்ளப்படாத பெண்களின் உழைப்பை முறையாக அங்கீகரித்திடவே பெண்களுக்குச் சொத்துரிமை வழங்கி, கல்வியிலும் வேலைவாய்ப்பிலும், உள்ளாட்சி அமைப்புகளிலும் இட ஒதுக்கீடு அளித்து பெண் உரிமை போற்றிட, கலைஞர் அவர்களின் பெயரால் இந்த மகளிர் உரிமைத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எனவேதான், இந்தத் திட்டத்திற்கு மகளிருக்கான உதவித் தொகை என்று இல்லாமல் ‘மகளிர் உரிமைத் தொகை’ என்று கவனத்துடன் பெயரிடப்பட்டிருக்கிறது.

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கேள்விகள் (FAQ)

1) எனக்கு ஏன்‌ பணம்‌ வரவில்லை?

உங்களது மனுவின் நிலை குறித்து 18/9/2023 முதல் அரசிடம் இருந்து குறுஞ்செய்தி அனுப்பப்படும். மேலும், உங்களது விண்ணப்பம் ஏற்கப்படவில்லை என்றால் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் எந்த விதிமுறைகளைப் பூர்த்தி செய்யவில்லை என்பதை தங்களது ஆதார் எண் மூலமாக லாகின் செய்து கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

2) அரசு குறுஞ்செய்தி வந்தது, ஆனால்‌ வங்‌இயில்‌ பணம்‌ வரவில்லை?

உங்கள் வங்கி கணக்குடன் ஆதார் என் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை சரி பார்க்கவும். மேலும் இதுதொடர்பாக, தங்களது வங்கிக் கணக்கில் ரூபாய் ஆயிரம் பெறப்பட்டுள்ள விவரத்தினை தங்களது வங்கிக் கிளைக்குச் சென்று தங்களது வங்கி கணக்குப் புத்தகத்தினை கொடுத்து உரிய பதிவுகளை மேற்கொள்ள கோருவதன் வாயிலாகவும் அறிந்து கொள்ளலாம்.

3) எனக்கு ஏன்‌ அரடம்‌ இருந்து குறுஞ்செய்தி வரவில்லை?

அரசிடம் இருந்து தங்களுக்கு குறுஞ்செய்தி ஏதும் வரப் பெறவில்லை எனில் தங்களது கைபேசியின் இயக்கத்தினை சரிபார்க்கவும். தங்களது விண்ணப்பம் பரிசீலனையில் இருக்கும் பட்சத்திலும் குறுஞ்செய்தி உடனே வராது. தங்களது மனுவின் நிலையை அறிய ஆதார் எண்ணை உள்ளீடு செய்து இணையதளத்தில் சரிபார்த்து தெரிந்து கொள்ளலாம்.

4) எப்போது மேல்முறையீடு செய்யலாம்‌, எங்கு மேல்முறையீடு செய்யலாம்‌?

பதிவு செய்யப்பட்ட தங்களது கைபேசி எண்ணுக்கு தங்களது மனுவானது தள்ளுபடி செய்யப்பட்டதாக குறுஞ்செய்தி வரப்பெற்று 30 நாட்களுக்குள் தாங்கள் தகுதி வாய்ந்த பயனாளி என்பதற்கான உரிய ஆதார ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட வருவாய் கோட்ட அலுவலருக்கு இ-சேவை மையம் வழியாக மட்டுமே மேல்முறையீடு செய்ய வேண்டும்.

5) எனது விண்ணப்பம்‌ எந்த காரணத்தினால்‌ தள்ளுபடி செய்யப்பட்டது?

19/9/2023 அன்று முதல் தங்களது பதிவு செய்யப்பட்ட தொலைபேசி எண்ணுக்கு தங்களது விண்ணப்பம் ஏற்கப்படாதற்கான காரணமானது குறுஞ்செய்தியாக அனுப்பி வைக்கப்படும் இந்நேர்வில் தாங்கள் மேல்முறையீடு செய்ய விரும்பினால் தங்களது தகுதிக்கான உரிய ஆதாரத்துடன் குறுஞ்செய்தி பெறப்பட்ட 30 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட வருவாய் கோட்ட அலுவலருக்கு இ-சேவை மையத்தின் வாயிலாக மேல்முறையீட்டு விண்ணப்பம் செய்து கொள்ளலாம்.

Have a question? Please feel free to reach out by leaving a comment below

(Visited 23 times, 1 visits today)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *